அப்பா கூறிய வார்த்தை..! மேடையில் உணர்ச்சிவசப்பட்டு அழுத விஷ்ணு விஷால்..

Author: Rajesh
4 February 2022, 11:22 am

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள குஐசு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில், விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா, ஸ்டண்ட் சில்வா உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.
வுpழாவில் கலந்து விஷ்ணுவிஷாலின் தந்தை, ‘ஒரு தந்தையாக எனது மகனை இப்படி பார்ப்பது எனக்கு பெருமை’ படுகிறேன் என்றார். இதனால் உணர்ச்சிவசப்பட்ட விஷ்ணுவிஷால் மேடையிலேயே கண்கலங்கி விட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய விஷ்ணுவிஷால், ‘என் அப்பாவிடம் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேச வேண்டாம் என சொல்லி இருந்தேன். அவர் பேசிய இரண்டு வரிகளில் நான் எமோஷனலாகி விட்டேன். என்றார்.

கிரிக்கெட் முதல் சினிமா வரை பல தோல்விகளைக் எனது வாழ்க்கையில் கடந்து வந்துள்ளேன். ராட்சசன் படத்திற்கு பிறகு தான் எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ராட்சன் விஷ்ணு விஷாலுக்கும், எஃப்.ஐ.ஆர் விஷ்ணு விஷாலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என தனுஷ் பாராட்டியதாக தெரிவித்த அவர், உதயநிதி ஸ்டாலின் அண்ணா எனக்கு நிறைய அறிவுரைகள் சொல்லியுள்ளார் என்றும் மேடையில் தெரிவித்தார்.
எஃப்.ஐ.ஆர் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி தமிழ்இ தெலுங்கு என இரு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்