முதல்ல பம்முறாங்க அப்றம் சட்டம் பேசுறாங்க..வேதனையில் ஃபயர் பட இயக்குனர்.!

Author: Selvan
13 February 2025, 4:46 pm

ஃபயர் படத்தில் ரச்சித்தா மற்றும் பாலா செய்த அட்டூழியம்

பாலா மற்றும் ரச்சித்தா நடிப்பில் உருவாகியுள்ள ஃபயர் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.இப்படத்தை ஜே சதீஸ்குமார் இயக்கி தயாரிக்கவும் செய்துள்ளார்.

இதையும் படியுங்க: விஜயை பொழந்து கட்டிய கும்பல்…இது எப்போ நடந்துச்சு..அவரே சொன்ன சுவாரசிய தகவல்.!

நாகர்கோவிலில் காசி என்ற நபர் பல பெண்களை ஏமாற்றி தற்போது சிறையில் உள்ளார்,இந்த கதையை மையமாக வைத்துதான் இப்படம் உருவாகியுள்ளது.படத்தில் பாலா காசி ரோலில் தான் நடித்துள்ளார்.,இந்த நிலையில் ஜே சதீஸ்குமார் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Fire movie Bala Rachitha controversy

அதில் நடிகை ரச்சித்தா பற்றியும் பாலா பற்றியும்,அவர்கள் நடந்து கொண்ட விதத்தை பற்றியும் பல உண்மைகளை வெளிப்படையாக பேசியுள்ளார்.அதில் ரச்சித்தாவிடம் முதலில் பேசும் போதே படத்தில் கவர்ச்சி இருக்கும்,இந்த ரோலில் இப்படி தான் நடிக்க போறீங்க என எல்லாமே பேசி சம்பளத்தையும் ஓபனாக சொல்லி,அக்ரீமெண்ட் போட்டு தான் நடிக்க வந்தார்.

ஆரம்பத்தில் ரொம்ப ஈடுபாட்டுடன் நடித்த அவர்,அவருடைய பிறந்தநாள் அன்று நாங்கள் ஒரு கிலிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு வாழ்த்து கூறினோம்,அந்த வீடியோ வைரல் ஆகி,பலரும் நெகடிவ் கமெண்ட்களை ரச்சித்தாவின் மீது தெரிவித்து வந்தனர்.இதனால் அவர் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்,அப்படத்தில் அவர் நடித்துள்ள காட்சிகளை தான் போட்டுளோம்,இதில் என்ன தவறு உள்ளது,இதன்மூலம் படம் மக்கள் மத்தியில் பேசப்படும் என்ற நோக்கத்தில் தான் பண்ணோம் என பேசியிருப்பார்.

மேலும் பாலாவை முதலில் நடிக்க அழைத்த போது,நீங்கள் இப்போ தான் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறீங்க,அதனால் உங்களுக்கு 5 லட்சம் படம் ரிலீஸ் ஆன பிறகு செட்டில்மென்ட் செய்யறோம் என கூறினோம்.முதலில் எல்லாத்துக்கும் ஒகே சொல்லிவிட்டு,பின்பு காசு கொடுத்தால் மட்டுமே பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என கூறி,அடிக்கடி காசு கேட்டு தொந்தரவு செய்தார் என படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஜே சதீஸ் குமார் அந்த பேட்டியில் கூறியிருப்பார்.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!