ரஜினியும் இல்ல.. கமலும் இல்ல.. சினிமாவில் முதன் முதலில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியது யார் தெரியுமா?..

Author: Vignesh
16 March 2024, 5:22 pm

ரஜினி, கமல் 40 ஆண்டுகால தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர். என்னதான் இவர்களின் படங்களுக்கு இடையில் போட்டிருந்தாலும் இவர்கள் நெருங்கிய நண்பர்களாகத்தான் பழகி வருகிறார்கள். யானைக்கும் அடி சறுக்கும் என்று ஒரு பழமொழியை சொல்வார்கள் அப்படித்தான் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கமல் மற்றும் ரஜினியை மிரளவிடும் அளவிற்கு சில புதுமுக நடிகர்கள் தமிழ் சினிமாவை களம் இறங்கி இருந்தார்கள். உலகநாயகன் மற்றும் சூப்பர் ஸ்டாரின் படங்கள் 100 நாட்களை தாண்ட சிரமப்பட்டு கொண்டிருக்கும் போது, புதுமுக நடிகர்களின் படங்கள் 200 நாட்களை தாண்டி தியேட்டரில் வெற்றி நடை போட்டு இருக்கிறது.

rajini kamal- updatenews360

முன்னதாக சினிமாவின் தற்போதைய சூழலில் ஒரு படம் மாபெரும் வெற்றியடைந்து விட்டாலே, தங்களது சம்பளத்தை கோடிகளில் உயர்த்தி விடுவார்கள். ஆனால், ரஜினி கமல் காலகட்டத்தில் அப்படியெல்லாம் கிடையாது. ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்பது அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய விஷயமாக இருந்தது.

rajkiran-updatenews360

இன்று 100 கோடி 150 கோடியில் சம்பளம் வாங்கும் ரஜினி, கமல் அன்று ஒரு கோடி சம்பளம் வாங்க பல வருடங்கள் ஆனது. ஆனால், அவர்களுக்கு முன்பே ஒரு கோடி சம்பளம் வாங்கி மாஸ் காட்டினார் நடிகர் ராஜ்கிரன். அவருக்கு பிறகு தான் ரஜினி, கமல் எல்லாம் ஒரு கோடி சம்பளம் வாங்க துவங்கினார்கள். நடிகர்களில், ஒரு கோடி சம்பளம் வாங்கியது ராஜ்கிரண்.

ஆனால், நடிகைகளில் ஒரு கோடி சம்பளத்தை முதன்முதலில் வாங்கியது யார் தெரியுமா வேறு யாருமில்லை நடிகை ஸ்ரீதேவி தான். இந்திய சினிமாவின் கனவு கன்னியாக ஒரு காலத்தில் வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தான் நடித்த முதல் படத்தில் ரூபாய் 5000 சம்பளமாக வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து, சினிமாவின் உச்சத்திற்கு வந்த ஸ்ரீதேவி தான் நடித்த ஒரு ஹிந்தி படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இதன் மூலம், இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையை நடிகை ஸ்ரீதேவி பெற்றுள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 213

    0

    0