என் மானத்தை வாங்கிடாதே… கீர்த்தி சுரேஷிடம் கையெடுத்து கும்பிட்ட அப்பா!

Author:
28 August 2024, 1:42 pm

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு விக்ரம் பிரபு இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் இப்படி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் தற்போது ரகு தாத்தா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. பெண்களின் சுதந்திரம் பற்றிய கருத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்.

அதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான. தெறி படத்தின் இந்தி ரீமேக்காக எடுக்கப்பட்டிருக்கும் “பேபி ஜான்” திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகை சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

keerthy suresh - updatenews360

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் அறிமுகமான புதிதில் தன் தாய் தந்தையிடம் நான் சினிமாவில் நடிக்க போறேன் என்று சொன்னதும் அவர்களது ரியாக்ஷன் என்னவாக இருந்தது? என சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்டதற்கு…

என்னை அமெரிக்காவுக்கு அனுப்பி நல்லா படிக்க வச்சி ஒரு நல்ல கம்பெனில வேலை பார்க்கணும் அப்படிங்கறது தான் என்னோட அப்பாவோட ஆசை. ஆனால் எனக்கு அதுல விருப்பமே இல்ல. எனக்கு மாடலிங் துறையில கவனத்தை செலுத்தி அதன் மூலமாக திரைப்படத்தில் நடிக்கணும் என்று நினைச்சிருந்தேன்.

உடனே நான் என்னோட சினிமா ஆசை என்னோட அம்மாகிட்ட கூறிய சொன்னப்போ… நீ சினிமாவுல நடிக்க போறேனா நேரத்தை மிகச்சரியா கையாள வேண்டும் அப்படின்னு சொன்னாங்க… அது மட்டும் இல்லாம இயக்குனர் முதல் யூனிட் பாய் வரை எல்லாரையும் ஒரே மாதிரி ட்ரீட் பண்ணனும் அப்படின்னு எனக்கு அட்வைஸ் பண்ணாங்க.

எங்க அப்பா கிட்ட நான் சொல்லும்போது…. நான் நல்ல பேரை சம்பாதிச்சு வச்சிருக்கேன் என் மானத்தை வாங்கிடாதே என்று முதல் வார்த்தையா அதைத்தான் என்னோட அப்பா சொன்னாரு என்று கீர்த்தி சுரேஷ் மிகவும் காமெடியாக அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 202

    0

    0