பாகுபலி படத்தில் முதல் சாய்ஸ் சத்யராஜ் இல்லை.. லட்டு போல் கிடைத்த வாய்ப்பை தவற விட்டுட்டாரே..!

Author: Vignesh
17 February 2024, 5:18 pm

80களின் காலகட்டத்தில் இருந்து இன்றுவரை தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு தவிர்க்க முடியாத நடிகராக சத்யராஜ் இருந்து வருகிறார். முதலில் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்து வந்த சத்யராஜ் அதன் பிறகு தான் நடிகராக மாறினார். இவரின் பள்ளிக்கால நண்பரான மணிவண்ணனுடன் சத்யராஜு இணைந்து பல படங்களில் நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அது மட்டுமல்லாமல் மணிவண்ணன் இயக்கிய பெரும் படங்களில் சத்யராஜ் நடித்து, இவர்களில் காம்பினேஷனில் நிறைய படங்கள் வெற்றியை கண்டுள்ளது.

கதாநாயகன் வில்லன் குணசித்திர கதாபாத்திரம் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் சத்யராஜ் நடித்திருக்கிறார். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் பெரியாரின் தீவிர வெறியன் ஆகவும் இருந்திருக்கிறார். மேலும் தந்தை பெரியாராக நடித்த திரைப்படத்தில் ஊதியம் வாங்காமல் சத்யராஜ் அந்த படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

sathyaraj -updatenews360

சத்யராஜ் உடைய சினிமா கேரியரில் நூறாவது நாள், ஜல்லிக்கட்டு, ரிக்ஷா மாமா, வில்லாதி வில்லன், வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை போன்ற படங்கள் இவரது நடிப்பிற்கு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். இப்படி திரைத்துறையில் மதிப்புமிக்க ஒரு நடிகராக இருப்பவர் சத்யராஜ்.

sathyaraj -updatenews360

முன்னதாக சுமார் 500 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகமாக இயக்கப்பட்ட பாகுபலி படம் அமோகமாக வசூல் வேட்டை நடத்தியது. இந்த படத்தில், பாகுபலியை அடுத்து மிகவும் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்றால் கட்டப்பா கதாபாத்திரத்தை சொல்லலாம். சத்யராஜ் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் என்றே கூறலாம். ஆனால், கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வானது சத்யராஜ் கிடையாதாம்.

sanjay dutt-updatenews360

பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்தை தான் முதல் சாய்ஸாக இயக்குனர் வைத்திருந்தாராம். இந்த தகவலை ராஜமவுளியின் தந்தையும் எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 482

    0

    0