பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முதல் போட்டியாளர் இவர் தான்.. அடித்து சொல்லும் ஜி.பி.முத்து ரசிகர்கள்..!
Author: Vignesh13 October 2022, 1:15 pm
பிக்பாஸ் வீட்டில், விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இந்த பிக்பாஸ் 6 ஆரம்பத்திலேயே கலைகட்டியுள்ளது.
இதில் அசீம், ஜி.பி.முத்து, ரச்சிதா மகாலட்சுமி, அசல் கோலார், தனலட்சுமி, ஆயீஷா, மகேஸ்வரி, அமுதவாணன், உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
பிக்பாஸ் வீட்டின் முதல் வாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அதற்குள் பிக்பாஸ் வீட்டை விட்டு முதல் ஆளாக வெளியேற போவது யார் என்ற சலசலப்பு இணையதளத்தில் பேசு பொருளாகி வருகிறது.
முன்னதாக வரும் வாரத்திற்கான நேரடியான நாமினேஷனில், ஆயீஷா, விக்ரமன், அசீம், உள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு முதல் நபராக தனலட்சுமி வெளியேறுவார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
ஏனென்றால் தனலட்சுமி நேற்று ஜி.பி.முத்துவை பார்த்தாலே காண்டாகுது என கூறியுள்ளார். இதை பார்த்த ஜிபி முத்து ரசிகர்கள் பலரும் தனலட்சுமி அடுத்த வார எலிமிசேஷனின் சிக்கினால் கண்டிப்பாக அவர் தான் முதல் நபராக வீட்டில் இருந்து வெளியேறுவார் என்று கூறி வருகிறார்கள். இதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.