அஜித் பட நடிகர் மீது முதல் மனைவி பரபரப்பு புகார்.. 3வது மனைவியுடனும் சிக்கலா?

Author: Hariharasudhan
21 February 2025, 8:58 am

வீரம் பட நடிகர் பாலா மீது அவரது முதல் மனைவி கொச்சி போலீசில் புகாரளித்துள்ளார். ஆனால், இது பற்றி தனக்குத் தெரியாது என பாலா கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்: தமிழில் வெளியான அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், வீரம் மற்றும் தம்பி உள்பட பல தமிழ், மலையாளப் படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர் பிரபல இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். இந்த நிலையில், இவர் கடந்த 2010ஆம் ஆண்டு பிரபல மலையாளப் பாடகி அமிர்தா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஆனால், இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, அமிர்தா சுரேஷை பாலா விவாகரத்து செய்தார். இதன் பின்னர், எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். ஆனால், இந்த திருமண வாழ்வும் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

எனவே, எலிசபெத்தையும் பாலா விவாகரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த வருடம் தன்னுடைய மாமன் மகளை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், முதல் மனைவியான அமிர்தா சுரேஷ், நடிகர் பாலா மீது கொச்சி போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Veeram actor Bala

அந்தப் புகாரில், “எனது கணவராக இருந்த பாலா உடனான விவாகரத்து வழக்கில், இருவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன் 5வது பக்கத்தை அவர் போலியாகத் தயாரித்துள்ளார். அதாவது, மகளின் பெயரில் எடுக்கப்பட்ட இன்சூரன்சில் அவர் முறைகேடு செய்துள்ளார்.

இதையும் படிங்க: கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!

குறிப்பாக, பிரீமியம் தொகையை அவர் கட்டவில்லை. இன்சூரன்ஸுக்கான தொகையைத் திரும்ப எடுத்துக் கொண்டார். வங்கியில் மகளின் பெயரில் டெபாசிட் செய்த 15 லட்சம் ரூபாயையும் அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார். மேலும், போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தையும் ஏமாற்றியுள்ளார்.

எனவே, பாலா மீது வழக்குப் பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில், நடிகர் பாலா மீது கொச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேநேரம், இந்த வழக்கு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பாலா கூறியுள்ளார். இதனால், மூன்றாவது மனைவிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

  • Thirupaachi movie title story விஜய் படத்துக்கு 150 டைட்டிலா..அந்த ஒரு பாட்டுனால தப்பிச்சேன்..வெளிப்படையாக பேசிய இயக்குனர்.!
  • Leave a Reply