பிரபல நடிகரை வளைத்து போட நினைத்த 5 நடிகைகள்: கண்ணழகி வலையில் சிக்காமல் டாட்டா காட்டிய சின்ன தம்பி..!

Author: Vignesh
29 March 2023, 12:30 pm

80, 90-களில் நடிகர் பிரபு காதல் மற்றும் ஆக்சன் திரைப்படங்கள் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருந்தார். நடிகர் பிரபு நடித்த அனைத்து படங்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படியாக தான் இருந்தது. இவர் 215 படங்களுக்கும் மேல் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரபு நடிக்கும் காலத்தில் இவருடன் நடித்த சில நடிகைகளுடன் காதலில் இவர் இருந்ததாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அந்தக் காதல் கை கூடாமல் வெறும் கனவாகவே முடிந்து விட்ட நிலையில் அந்த நடிகைகள் யார் என்று இப்போது பார்க்கலாம்.

prabhu-updatenews360

நடிகை குஷ்பூ சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு தமிழில் தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் கதாநயகியாக அறிமுகம் ஆனார். பின்னர் வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், சின்னத்தம்பி, மன்னன், சிங்காரவேலன், நாட்டாமை, கருப்பு நிலா, போன்ற தொடர்ந்து படங்களில் நடித்து மிகப்பெரிய பிரபலமான நடிகையாக குஷ்பூ ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருந்தார்.பிரபு கூட இணைந்து பத்து படங்களுக்கும் மேல் ஜோடியாக நடித்து பெஸ்ட் ஜோடி என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் இருந்தார்கள். அதனால் பிரபுவும் குஷ்பூவும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்து, சில பிரச்சினையால் காதல் கைகூடாமல் போய்விட்டது.

நடிகை ஸ்ரீபிரியா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஸ்ரீபிரியா முதன் முதலில் தமிழில் அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் அறிமுகமாகி, பிறகு பட்டிக்காட்டு ராஜா, ஆட்டுக்கார அலமேலு, ஆடுபுலி ஆட்டம், பில்லா, பொல்லாதவன், சிகப்பு மலர்கள் போன்று தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். பிறகு நடிகை ஸ்ரீபிரியா பிரபுவுக்கு ஜோடியாக சங்கிலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபுவுக்கு நடிகை ஸ்ரீபிரியா மேல் ஒரு ஆசை ஏற்பட்டதாக தெரிகிறது பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக இவர்களுடைய காதல் பிரிந்து விட்டது.

நடிகை அம்பிகா குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கை தொடங்கி பின்னர் 200க்கும் மேற்பட்ட தென்னிந்திய படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். நடிகை அம்பிகா அந்த ஏழு நாட்கள் திரைப்படத்தில் நடிகையாக தமிழில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கமல், ரஜினி,சத்யராஜ், மம்முட்டி போன்ற முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்து உள்ளார். அத்துடன் பிரபுவுக்கு ஜோடியாக ஏழு படங்களுக்கு மேல் நடித்து அவருக்கு ஒரு பிடித்தமான நடிகையாக மாறிவிட்டா நிலையில், பிரபுவுக்கு லவ் வந்துவிட்டது. ஆனால் அது கல்யாணம் வரை போகாமல் பாதியிலே முடிவுக்கு வர காரணம் நடிகை அம்பிகா பிரபுவின் அப்பாவுக்கும் ஜோடியாக நடித்ததால் இவர்கள் காதல், கல்யாணம் வரை போகாமல் நின்று விட்டதாக கூறப்படுகிறது.

நடிகை ரேவதி ஒரு காலத்தில் அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். அன்றைய காலகட்டத்தில் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. நடிகை ரேவதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், ஹிந்தி போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழில் மண்வாசனை என்ற படத்தின் மூலம் அறிமுகமானதை தொடர்ந்து கன்னி ராசி, உத்தம புருஷன், கிழக்கு வாசல், தெய்வவாக்கு, தேவர் மகன் போன்ற வெற்றி படங்களின் நடித்து உள்ளார். நடிகை ரேவதி பிரபுக்கு ஜோடியாக ஆறு படங்களுக்கு மேல் நடித்து ஒரு வெற்றி ஜோடி என்ற பட்டத்தை இவர்கள் பெற்று உள்ளார். அந்தக் காலத்தில் இவர்கள் இருவரும் நடிக்கும் போது இவர்களுடைய புரிதல் நன்றாகவே இருந்ததால் பிரபுக்கு இவர் மீது ஒரு காதல் ஏற்பட்டு இருந்து அதுவும் பின்னர் தேல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

நடிகை கனகா பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள். நடிகை கனகா கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகி தொடர்ந்து தங்கமான ராசா, அதிசய பிறவி, கும்பக்கரை தங்கையா, சாமுண்டி படங்களை நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில், பிரபுக்கு ஜோடியாக நான்கு படங்களில் நடித்து உள்ளார். நடிகை கனகாவின் கண்ணழகில் கவர்ந்து பிரபு இவரது மடியே சொர்க்கம் என்று இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Kanaka - Updatenews360
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1056

    3

    3