சம்திங் சம்திங்… விஜய்யுடன் தீபாவளி கொண்டாடிய பிரபல நடிகை.. பிரச்சனை வெடிக்குமா?
Author: Vignesh13 November 2023, 12:01 pm
பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.
தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
அதையடுத்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க பிசியாக நடித்து வரும் மிருணாள் தாகூர், சமீபத்தில் இறுக்கமான உடையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இதனிடையே, தற்போது விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக பேமிலி ஸ்டார் என்ற படத்தில் மிருணாள் நடித்துள்ளார். அந்த படக்குழுவினர் தீபாவளி கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட, ரசிகர்கள் செமயாக கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். விஜய் தேவரகொண்டாவின் காதலி நடிகை இந்த புகைப்படத்தை பார்த்து செம கோபமாக போகிறார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.