‘கமல், விஜய், சூர்யா, கார்த்தி.. 4 பேரும் ஒரே Frame’ல..’ லோகேஷ் சொன்ன அப்டேட்: பிரம்மாண்டம் Loading..!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2023, 7:30 pm

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற தொடர் வெற்றி திரைப்படங்களை இயக்கியதன் தமிழ் மட்டுமல்லாது மொத்த இந்திய திரையுலகில் பிரபலமாக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

vikram movie - updatenews360- 8

இதில் இன்னும் சிறப்பம்சம் என்னவென்றால், கைதி திரைப்படத்தின் நிறைய reference’ஐ விக்ரம் படத்தில் உபயோகித்து தனக்கே உரித்தான LCU என்னும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் வகையில் திரைக்கதையை இயக்கியிருந்தார். படத்தின் இறுதி காட்சியில் சிறப்பு தோற்றத்திலும் நடிகர் சூர்யா தோன்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் தளபதி67.

இப்படத்தின் திரைக்கதை மற்றும் நடிக்கவுள்ள நடிகர் – நடிகைகள் குறித்து எக்கச்சக்க தகவல்கள் இணையத்தில் உலா வந்தன. ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் ரிலீஸிற்காக லோகேஷ் காத்திருந்தார். அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதைத் தொடர்ந்து, தற்போது லோகேஷ் படத்தின் அப்டேட் ஒன்றை பங்கேற்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

lokesh kanagaraj - updatenews360

அப்போது, பிப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அதிகாரபூர்வ அறிவிப்பு என்றும் லோகேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் பிரபல ஆன்லைன் சேனல் சார்பில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 திரைப்படம் குறித்தும், இதற்கு முன்பு அவர் இயக்கிய திரைப்படங்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த சமயத்தில் சில மீம்ஸ்கள் அங்கே காண்பிக்கப்பட, அது பற்றி லோகேஷ் கருத்து தெரிவித்திருந்தார்.

அப்போது லோகேஷ் படத்தில் நடித்துள்ள கமல்ஹாசன், விஜய், சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய நான்கு பேர் ஒரே ஃப்ரேமில் வர ஏதாவது வாய்ப்புள்ளதா என ரசிகர்கள் ஆசைப்படுவது போல ஒரு மீம் காண்பிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த லோகேஷ், “எனக்கும் பெருசா ஆசை இருக்கு. இது பண்ணனும்ன்னு எல்லாருக்கும் ஆசை தானே. இந்த யூனிவர்ஸ் முடியணுன்னா அப்படித்தான் ஆகும். ஆனா எல்லாத்துக்கும் கொஞ்சம் டைம் ஆகும்” என பதில் தெரிவித்தார்.

ActorVijayLokeshkanagaraj_Thalapthy67_Updatenews360

ஏற்கனவே கமல்ஹாசன், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் விக்ரம் மற்றும் கைதி படங்கள் காரணமாக லோகேஷ் யூனிவர்ஸில் இணைந்தது போல, தளபதி67 படம், லோகேஷ் யூனிவர்ஸில் இணையும் பட்சத்தில், நிச்சயம் இந்த நான்கு நடிகர்களும் ஒரே படத்தில் இணைவதற்கு ஏதேனும் வாய்ப்புகள் இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். லோகேஷின் இந்த பதில் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!