ரெஸ்டாரன்டில் காலாவதி அரிசி; சிக்கிய லோகேஷ் கனகராஜ் பட ஹீரோ; சொன்னது என்ன?

Author: Sudha
15 July 2024, 1:40 pm

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் 2 படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சந்தீப் கிஷன்.கடந்த வருடம் வெளியான தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்து நடித்த சந்தீப் கிஷன் விரைவில் தனுஷின் இயக்கத்தில் வெளியாக உள்ள ராயன் படத்திலும் இணைந்து நடித்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் செகந்திராபாத்தில் ‘விவாக போஜனம்பு’ என்கிற ஒரு ரெஸ்டாரண்டின் கிளையை சொந்தமாக நடத்தி வருகிறார் சந்தீப் கிஷன்.

சமீபத்தில் இந்த ரெஸ்டாரண்டை சோதனை செய்த சுகாதார துறை அதிகாரிகள் சுகாதார குறைபாடுகள் உள்ளிட்ட பல குறைகள் இருப்பதை கண்டறிந்து அது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அது மட்டுமல்ல 2022ல் காலாவதியான அரிசி மூட்டை ஒன்றும் அங்கே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார்கள் மறுப்பு தெரிவித்துள்ளார் சந்தீப் கிஷன், அவர் கூறும் போது அதிகாரிகள் என்னுடைய ஹோட்டலில் எடுத்ததாக வெளியாகி உள்ள புகைப்படங்கள் பல எங்களுடைய ஹோட்டலில் எடுக்கப்படவில்லை. அந்த அரிசி மூட்டை நாங்கள் தர சோதனைக்காக வாங்கி, பயன்படுத்தாமல் வைத்துவிட்ட ஒன்று.

எட்டு வருடங்களாக நாங்கள் அனைத்து சுகாதார விதிகளையும் சரியாக பின்பற்றியே இந்த ரெஸ்டாரண்டை நடத்தி வருகிறோம். உங்களுடைய அன்பை ஒருபோதும் நாங்கள் இழக்க விரும்ப மாட்டோம்” என்று கூறியுள்ளார்.இந்த செய்தி இப்போது திரை உலகில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 141

    0

    0