சூர்யா – ஜோதிகா காதலுக்கு எமனாக இருந்தேனா? கடுங்கோபத்தோடு பதில் அளித்த சிவகுமார்!

Author: Shree
15 August 2023, 3:26 pm

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சிவகுமாருக்கு தன் மகன் ஒரு நடிகையை திருமணம் செய்வதில் விருப்பமே இல்லையாம். தன் ஜாதியில் பெண் எடுத்து திருமணம் செய்யவேண்டும் என எண்ணியதாகவும் அது நடக்காததால் மிகவும் வருத்தப்பட்டதாக சிவகுமாரே பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.

ஆனால், தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சிவகுமார் சூர்யா – ஜோதிகாவின் காதல் குறித்த கேள்விக்கு பதிலளித்திருந்தார். நான் என் மகன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தேனா? நான் பல்வேறு காதல் படங்களில் நடித்திருக்கிறேன். மகனின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து நடித்துள்ளேன். அப்படியிருக்கும் போது நான் எப்படி அவர்கள் காதலுக்கு எமனாக இருந்திருப்பேன்? உண்மையில் நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதுகுறித்து வெளியாகும் செய்திகள் எல்லாமே பொய் என கூறியுள்ளார்.

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!