பாம்பு மட்டும் தானா…TTF வாசன் வீட்டில் வனத்துறையினர் அதிரடி சோதனை..!

Author: Selvan
2 January 2025, 5:44 pm

TTF வாசனின் பாம்பு வீடியோ சர்ச்சை

கடந்த சில வருடமாக சர்ச்சைக்கு பெயர் போனவராக சிறந்து விளங்குபவர் TTF வாசன்.இவர் அமைதியாக இருந்தாலும் இவரை தேடி ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கும்.

இவர் பொதுவாக அதிவேகமாக பைக் ஓட்டுவது,பொதுமக்களுக்கு இடைஞ்சல் பண்ணும் விதமாக கூட்டத்தை கூட்டுவது போன்ற சர்ச்சைகளை தான் சந்தித்து வந்தார்.

Forest department raids TTF Vasan's home

ஆனால் சமீபத்தில் இவர் கையில் பாம்பை வைத்து கொண்டு,அதை வீடியோ எடுத்தது மட்டுமல்லாமல்,பொதுமக்களிடம் சென்று ஹீரோ போல மாஸ் காட்டியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதையடுத்து,அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என பலர் தங்களுடைய புகார்களை தெரிவித்து வந்தனர்.

இதையும் படியுங்க: புறநானுறில் இருந்து விலகிய SK…லீக்கான தகவலால் கோலிவுட் பரபரப்பு…!

சில நாட்கள் முன்பு அவர் பாம்பு வாங்கிய கடைக்கு சென்ற வனத்துறையினர்,அங்கே அறிய வகை ஆமைகள்,பறவைகள் என பலவற்றை பறிமுதல் செய்து,கடையை சீல் செய்தனர்.

இந்த நிலையில் வாசன் நான் உரிய அனுமதி வாங்கி தான் பாம்பை என் வீட்டில் வளர்த்து வருகிறேன் என தெரிவித்திருந்தார்.தற்போது அவரது வீட்டிற்கு வனத்துறை அதிகாரிகள் சென்று தீவிர விசாரணை செய்து,வீட்டை சோதனை செய்தும் வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 108

    0

    0

    Leave a Reply