“அஜித்தை விட சிறந்த மனிதர் ஒருவர் இல்லை” – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்!

Author: Shree
3 April 2023, 2:43 pm

தமிழ் சினிமா முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த மாதம் 24ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவருக்கு திரைபிரபலன்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அந்தவகையில் முன்னாள் அமைச்சர் விஜயாபாஸ்கர் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அவருடனான சந்திப்பு குறித்து ட்விட் செய்துள்ள விஜய பாஸ்கர், ” “தமிழ்த்திரையுலகின் மிகமுக்கியமான முன்னணி நடிகர் திரு.அஜீத்குமார் அவர்களின் அன்புத் தந்தை மறைவையொட்டி மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி அவர்களின் சார்பாக முன்னாள் அமைச்சர் அண்ணன் கடம்பூர் ராஜு அவர்களுடன் அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்தோம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த அச்சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிற வாய்ப்பு அமைந்தது.

அனுபவமும், மனப்பக்குவமும் நிறைந்த அவருடைய பேச்சில் எதார்த்தமும் உண்மையும் பிறர்க்கு உதவ வேண்டுமென்கிற தூய மனமும் வெளிப்பட்டது மிகுந்த பாராட்டுக்குரியது. ‘எண்ணம்போல் வாழ்க்கை, எண்ணம்போல் தான் வாழ்க்கை’ அன்புத் தந்தையின் ஆசியோடு தொடர்க! வெல்க! என அஜித்தை போன்ற சிறந்த மனிதர்கள் இல்லை என்பது போன்ற அர்த்தத்தில் பெருமையோடு பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி