லக்கி பாஸ்கர் பட துல்கர் போல் வாழ ஆசை.. எகிறி குதித்து தப்பியோடிய பள்ளி மாணவர்கள்!

Author: Hariharasudhan
11 December 2024, 3:01 pm

லக்கி பாஸ்கர் பட பாணியில் வாழ நினைத்து, ஆந்திராவில் விடுதியில் இருந்து தப்பிச் சென்ற 4 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள மஹாராணிப்பேட்டை என்ற பகுதியில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இங்கு 9ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்கள் சமீபத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தை பார்த்து உள்ளனர். அந்தத் திரைப்படத்தில், கதாநாயகன் துல்கர் சல்மான் பணம், வீடு ஆகியவற்றை மிக எளிதில் சம்பாதிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

இவ்வாறு இதனைப் பார்த்த மாணவர்கள், துல்கர் சல்மானைப் போல் எளிதில் நுட்பமாக பணம் சம்பாதித்து வீடு, கார் வாங்கிவிட்டு இங்கு வருவோம் என்று தங்களது சக நண்பர்களிடம் கூறி உள்ளனர். அது மட்டுமின்றி, இதனை நிறைவேற்றுவதற்காக விடுதியில் இருந்து 4 மாணவர்களும் தப்பித்துச் சென்று உள்ளனர்.

9th grade students missing for live Lucky Bhaskar in Vizag

பின்னர், இது குறித்து அறிந்த விடுதி நிர்வாகம், மாணவர்கள் குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளனர். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பித்துச் சென்ற 4 மாணவர்களையும் தேடி வருகின்றனர். மேலும் இந்த மாணவர்கள் கிரண் குமார், கார்த்திக், சரண் தேஜ் மற்றும் ரகு என்பது தெரிய வந்துள்ளது.

9th grade students missing for live Lucky Bhaskar in Andhra

சிக்கிய சிசிடிவி: மேலும், மாணவர்கள் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. எனவே, விடுதியில் இருந்து தப்பிச் சென்ற 4 மாணவர்களையும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் ஆந்திர மாநிலத்தை மட்டுமின்றி, படக்குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படிங்க: லாட்ஜ் அறையில் நிர்வாணமாக கிடந்த ஆண் சடலம்.. ஓட்டல் பெண் ஊழியரின் திடுக்கிடும் வாக்குமூலம்!

கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அதுல்ரி இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவான இப்படத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். கடந்த மாத ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

  • Vidaamuyarchi Release date அஜித் வாக்கு என்னாச்சு..? மீண்டும் தள்ளிப்போகிறதா விடாமுயற்சி ரிலீஸ்?