தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.
தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. தற்போது படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அண்மையில் கூட இப்படத்தின் காவலா பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ரஜினிகாந்த் ஆரம்பம் முதல் தன்னுடைய பெயரில் பவுண்டேஷன் ஒன்றினை நடத்தி வருகிறார். ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் நடந்து வரும் அறக்கட்டளை நிறுவனம் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தவர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறது.
அறக்கட்டளையின் அரங்காவலர் சிவராமகிருஷ்ணன் நேற்று போலீஸ் நிலத்தில் சென்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்தி முகநூலில் ஒரு போலி கணக்கு துவங்கப்பட்டு பொதுமக்களிடம் பணம் வசூலித்து சுமார் 2 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் இந்த விஷயம் இருப்பதாகவும், மக்களிடம் பணம் வசூலித்து குலுக்கல் முறையில் 200 பேரை தேர்வு செய்து தேவையான பரிசினை வழங்குவதாக கூறி ஏமாற்றி இருப்பதாகவும், இதுவரை சுமார் 2 கோடி வரை அந்த கும்பல் பணத்தைப் பறித்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக ரஜினிகாந்த் மகள் வீட்டில் நகைகள் கொள்ளை போனதை தொடர்ந்து ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் இப்படி ஒரு மோசடியை செய்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.