சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!

Author: Hariharasudhan
23 December 2024, 9:55 am

சன்னி லியோன் பெயரில் சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமணமான பெண்கள் மாதந்தோறும் பெறும் ஆயிரம் ரூபாயைப் பெற்று வந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராய்ப்பூர்: பிரபல நடிகை சன்னி லியோன், முதலில் ஆபாசப் படங்களில் நடித்து பிரபலமானவர். இதனையடுத்து, குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கிய இவர், திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். அதேநேரம், சில திரைப்படங்களிலும் அவ்வப்போது சன்னி லியோன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், பாஸ்டர் மாகாணத்துக்கு உட்பட்ட தாலூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த விரேந்திர ஜோஷி என்பவர், சன்னி லியோன் பெயரைப் பயன்படுத்து, அரசின் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பயனைப் பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சத்தீஸ்கரில் ஆளும் பாஜக அரசு சார்பில் மஹாதரி வந்தான் யோஜனா (Mahtari Vandan Yojana) எனும் திட்டத்தின் கீழ் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், இந்த திட்டத்தில் சன்னி லியோன் பெயரில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்து உள்ளது.

 A man fraud in the name of Sunny Leone Mahtari Vandan Yojana

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஹரீஸ் எஸ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினர், இது குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். அது மட்டுமல்லாமல், சன்னி லியோன் பெயரில் பெறப்பட்டு வந்த பயனை மாவட்ட ஆட்சியர் உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?

இதனிடையே, பாஜக அரசின் மஹாதரி வந்தான் யோஜனா திட்டத்தில் உள்ள 50 சதவீத பயனாளிகள் பொய்யாக உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பாஜி விமர்சித்து உள்ளார். இதற்கு, இதுபோன்ற திட்டங்களை கடந்த கால காங்கிரஸ் அரசு மக்களுக்கு அளிக்கவில்லை என மாநில துணை முதலமைச்சர் அருண் சோ கூறியுள்ளார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!