“சினிமாவில் எனக்கு சப்போர்ட் பண்ண ஆள் இல்ல”… ஐஸ் விற்கும் ப்ரண்ட்ஸ் பட நடிகர்..!
Author: Vignesh8 February 2023, 7:30 pm
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல நடிகர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். அப்படி மக்கள் மனதில் இடம் பிடித்த ஒரு நடிகர் தான் பரத் ஜெயந்த், இவர் விஜய்யின் ப்ரண்ட்ஸ், விஜய்காந்தின் வானத்தை போல, சகலகலா பூம் பூம் தொடர் என குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

அதன்பிறகு பள்ளி படிப்பு, கல்லூரி என படிப்பில் கவனம் செலுத்திய பரத் ஜெயந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் பணிபுரிந்தார்.
இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு சரியாக வாய்ப்புகள் கிடைக்கும் என பார்த்தால் அப்போதும் எதுவும் கிடைக்கவில்லை என்பதால், இப்போது இவர் ஒரு புதிய தொழிலிலை கையில் எடுத்துள்ளார்.

மேலும், கார்ட்டூன் படங்களில் ஐஸ்கிரீம் ட்ரக் இருப்பதை தான் பார்த்திருப்பதாகவும், இதுபோன்று சென்னையில் இல்லையே என்று நினைக்கும் போது தான் நாம் ஏன் இதை செய்யக்கூடாது என்று யோசித்து, புதிதாக ஐஸ்கிரீம் டிரக்கை தொடங்கி உள்ளார் தன்னிடம் எல்லா விதமான ஐஸ்கிரீம் வகைகளும் உள்ளன என பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர் தனக்கு சினிமாவில் உதவி செய்ய யாரும் இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.