முதல் நாளே அடிவாங்கிய லியோ… விஜய் பேனரை செருப்பை கழட்டி அடித்த ரசிகர்..! (வீடியோ)

Author: Vignesh
19 October 2023, 12:10 pm

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இரண்டாவது முறையாக இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் “லியோ” இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் என்று நிறைய நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருக்கின்றனர்.

leo-movie-updatenews360

லியோ சிங்கமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இறுதியில் பூனையாகவே உள்ளது. இறுதி முடிவு ஏமாற்றமே, லோகேஷ் கனகராஜ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், பல எதிர்ப்புகளை மீறி படம் இன்று வெளியான லியோ படத்தை பார்த்த ரசிகர்கள் இரண்டாம் பாகம் மொக்கையாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.

leo-movie-updatenews360

படத்தில் முற்றிலும் வேறு விதமான விஜயை பார்க்க முடிகிறது. முதல் பாதியில் கதையை பிட்ச் செய்ய நேர்த்தியான திரைக்கதையை கையாண்ட லோகேஷ், இரண்டாம் பாதியில் அதை கோட்டை விட்டு இருக்கிறார்.ஆக மொத்தம் இல்லையோ ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே லியோ கொடுத்திருக்கிறது.

leo-movie-updatenews360

அதிலும், கேரளாவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை லியோ நாசம் செய்திருப்பதாகவும், கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அதில், விஜய் ரசிகர் ஒருவர் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த விஜய் போஸ்டர் முன்பு செருப்பை கழட்டி, கூல்டிரிங்ஸ் பாட்டிலால் அடித்து கோபப்பட்டுள்ளார். அதன்வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து #LeoDisaster என்று டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்! 
  • Close menu