‘லொள்ளு சபா’ நடிகர் சேஷு காவேரி மருத்துவமனையில் அனுமதி.. மக்களிடம் பண உதவி கேட்டு கோரிக்கை..!
Author: Vignesh16 March 2024, 2:15 pm
விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் சேஷு. இவரை லொள்ளு சபா சேஷு என்றே பலர் அழைத்து வந்த நிலையில் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக 90 s கிட்ஸ் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சேஷு. இவர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த ஏ1 படத்திற்கு பின்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
சமீபத்தில், வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் ஒரே ஒரு நடனமாடி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். மக்கள் மனதில் நகைச்சுவை நடிகராக இடம் பிடித்துள்ள நடிகர் சேஷு திடீரென நேற்று மாரடைப்பு ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவருடைய சிகிச்சைக்கு 10 லட்சத்திற்கு மேல் தேவை இருக்கிறதாம். நடிகர் சேஷு பெரிய நட்சத்திரம் இல்லை என்பதை அனைவரும் அறிந்த விஷயம். 10 லட்சம் பணத்தை நடிகர் சேஷுவிற்கு கொடுத்து உதவும்படி அவருடைய உறவினர்கள் கேட்டுள்ளனர். அவருக்கு உதவி செய்ய வேண்டும் என நினைக்கும் நபர்கள் இந்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.
வங்கி விவரங்கள் :
Bank: Kotak Mahindra Bank, Account No.: 9412025212, IFSC: KKBK0000431, Type: Savings, Name: L BHARATH.