பில்டப் கொடுத்த ஜி.வி பெருமை பேசிய விவேகா; ரசிகர்கள் யார் பக்கம்?

Author: Sudha
4 July 2024, 12:29 pm

ஒரே சமயத்தில் இரண்டு பீரியட் படங்களைத் தயாரித்து வருகிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன் மற்றும் பலர் நடிக்கும் ‘தங்கலான்’ படம்.
அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி மற்றும் பலர் நடிக்கும் ‘கங்குவா’.

இதில் ‘கங்குவா’ அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.ஆனால் ‘தங்கலான்’ படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தங்கலான்’ படத்தை பார்த்த அந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார்,என்னால் முடிந்த சிறந்த வேலையை செய்துள்ளேன். அப்பா! என்ன ஒரு படம். விரைவில் எதிர்பார்க்கிறேன். அற்புதமான டிரைலர் ஒன்று விரைவில் வெளிவர உள்ளது. நிச்சயமாக அது உங்களை பிரமிக்க வைக்கப் போகிறது. இந்திய சினிமாவே அதன ரசிகர்களே ‘தங்கலான்’ படத்திற்காக தயாராக இருங்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.

‘கங்குவா’ படம் பற்றி பாடலாசிரியர் விவேகா, “கங்குவா’ படம் பார்த்து மெய்சிலிர்த்தேன். இந்திய சினிமாவுக்கு பெருமை தரப் போகும் பிரம்மாண்ட படைப்பு இது. சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார். சூர்யா சாரின் நடிப்பு இன்னும் மெருகெறி உச்சத்தை தொட்டுள்ளது.இந்த சிறந்த படத்தில் நானும் அங்கமாக இருப்பதற்குப் பெருமைப்படுகிறேன்,என்று பதிவிட்டுள்ளார்.

இனி ரசிகர்கள் தங்கலான் பக்கமா? அல்லது காங்குவா பக்கமா? என்பது படங்கள் தியேட்டரில் வெளியாகும் போது தெரியவரும்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!