இந்தியன் 2 எப்படி இருக்கு? பதில் சொல்லாமல் நகர்ந்த பிரபல இசையமைப்பாளர்
Author: Sudha21 July 2024, 12:57 pm
ஜி வி பிரகாஷ் குமார் தமிழ்த்திரை உலகின் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகர். பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இன்று சென்னையில் நடந்த தனியார் பார்மசி திறப்பு விழாவில் ஜி வி பிரகாஷ் குமார் கலந்து கொண்டார். அவரிடம் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இசை தற்போது அனைவராலும் கொண்டாடப் படுகிறது. தங்கலான் படத்தின் இசை எவ்வாறு வந்துள்ளது என நிருபர்கள் கேட்டதற்கு படத்தில் 5 பாடல்கள் அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது.ஆகஸ்ட் 15 படம் திரைக்கு வர உள்ளது பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.
இந்தியன் 2 திரைப்படம் இந்தியன் முதல் பாகம் வெளிவந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளி வந்துள்ளது திரைப்படம் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் சிரித்து விட்டு நகர்ந்தார் ஜி வி பிரகாஷ்.. பதில் சொல்லாமலே பதில் சொல்லிட்டாரு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஜி விக்கு படம் பிடிக்கவில்லை என அவர் சிரிப்பின் மூலமே தெரிந்து விட்டது என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.