பல கோடிக்கு நாமம் போட்ட லோக்கல் டிவி…அதிர்ச்சியில் கேம் சேஞ்சர் படக்குழு..!
Author: Selvan16 January 2025, 12:57 pm
லோக்கல் சேனலில் ஒளிபரப்பான கேம் சேஞ்சர்
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் பான் இந்திய படமாக வெளிவந்த திரைப்படம் கேம் சேஞ்சர்.இப்படம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்தது.
மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வசூலை வாரி குவிக்கும் என்று படக்குழு எதிர்பாத்திருந்த நிலையில்,நாளுக்கு நாள் வசூல் மந்தமாகி வருகிறது.மேலும் அரசியல் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டதால் பெரும்பாலான ரசிகர்களிடம் கேம் சேஞ்சர் வரவேற்பை பெறவில்லை,கலவையான விமர்சனத்தை பெற்று வந்த இப்படம்,தற்போது உள்ளூர் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி,அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
இதையும் படியுங்க: பிரபல நடிகரின் வீடு புகுந்து கத்திக்குத்து.. அதிர்ச்சியில் திரையுலகம்!
இதனால் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் குமார் தன்னுடைய X-தளத்தில் சம்மந்தப்பட்ட சேனல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் அவர் சினிமா என்பது வெறும் ஹீரோ,இயக்குனர்,தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல,பல வித கலைஞர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் தங்களுடைய கடின உழைப்பை போட்டுள்ளனர்.
This is unacceptable. A film that was released just 4-5 days ago being telecasted on local cable channels & Buses raises serious concerns. Cinema is not just about the Hero, director or producers – it’s the result of 3-4 years of hard work, dedication and the dreams of thousands… https://t.co/ukPHIpi6ko
— SKN (Sreenivasa Kumar) (@SKNonline) January 15, 2025
இந்த படங்களின் வெற்றி மற்றும் வசூலை நம்பி தான் பல குடும்பங்கள் உள்ளது,இப்படி படம் ரிலீஸ் ஆன 4 நாட்களில்,சட்டத்திற்கு மீறி பல தனியார் லோக்கல் சேனல்கள் செயல்படுவதால்,திரையுலகம் பெரும் நஷ்டத்தை சந்தித்து கொண்டிருக்கிறது.
மேலும் படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான தில் ராஜுவும் சைபர் கிரைம் போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.ஏற்கனவே கலவையான விமர்சனத்தை பெற்று,வசூல் வேட்டையில் திணறி வரும் கேம் சேஞ்சுருக்கு,தற்போது இந்த அதிர்ச்சி செயலால்,மேலும் சரிவை சந்தித்து வருகிறது.