மதுரையில் நடந்த உண்மைச் சம்பவமே கேம் சேஞ்சர்.. எஸ்.ஜே.சூர்யா சுவாரஸ்ய பகிர்வு!

Author: Hariharasudhan
10 January 2025, 1:29 pm

மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவியே கேம் சேஞ்சர் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக எஸ்ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம், இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. முன்னதாக, இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீடு உரிமைதாரராக ராக் போர்ட் நிறுவனம் உள்ளது.

இந்த நிலையில், இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள புரோமோஷன் வீடியோவில், நடிகர் எஸ்ஜே சூர்யா பேசியுள்ளார். அதில் பேசிய அவர், “இதுவரை என்னுடைய படங்களுக்கு பெரும் வரவேற்பைக் கொடுத்துள்ளீர்கள். தற்போது ஷங்கர் சாரின் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண், கைரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்டோருடன் நடித்துள்ளேன்.

பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரித்திருக்கிறார். எனது முந்தைய படங்களுக்கு கொடுத்த ஆதரவைப் போன்று இதற்கும் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதன் கதையினை கார்த்திக் சுப்புராஜ், மதுரையில் உள்ள ஒரு கலெக்டரின் வாழ்க்கையில் இருந்து எடுத்து, ஆந்திராவில் நடக்கும் கதையாக எழுதியிருக்கிறார்.

Game Changer true story

ஷங்கருக்கு ஏற்றதொரு கதை என்பதால், பிரமாண்டமாக செய்திருக்கின்றனர். திருவின் ஒளிப்பதிவு, பிரபுதேவா, ஜானி ஆகிய மாஸ்டர்களின் நடனம், தமனின் இசை என அனைத்துமே நன்றாக வந்துள்ளது. தமிழ், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது.

இதையும் படிங்க: 7 நாளும் வேலை பார்க்கனுமா? கொதித்தெழுந்த தீபிகா படுகோன்!

எனக்கு ரொம்ப கதை பிடித்துப் போய் சிறப்பான முறையில் செய்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். மதுரையில் ஒரு கலெக்டருக்கும், அரசியல்வாதிக்கும் நடந்த உண்மைச் சம்பவம் தான் இந்தக் கதை. நல்ல கருத்துள்ள பிரமாண்ட படமாக வந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

  • Aamir Khan Quit Smoking for Son மகனுக்காக அதை பண்ண ரெடி…பட விழாவில் அமீர் கான் பரபர பேச்சு..!
  • Views: - 45

    0

    0

    Leave a Reply