படத்தால் நடந்த விபரீதம்…”கேம் சேஞ்சர்”பட நாயகி மருத்துவமனையில் திடீர் அனுமதி..!
Author: Selvan4 January 2025, 6:45 pm
பட ப்ரோமோஷன் விழாவை தவிர்த்து வரும் கியாரா அத்வானி
ஷங்கரின் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர்.இப்படத்தில் பிரபல நடிகர் ராம் சரண் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்த்துள்ள நிலையில் வரும் பொங்கல் பண்டிகையை குறிவைத்து ஜனவரி 10 ஆம் தேதி பான் இந்திய அளவில் இப்படம் வெளியாக இருக்கிறது .
இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழு பல ஊர்களில் விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் மும்பையில் நடைப்பெற்ற விழாவின் போது படத்தின் நடிகை கியாரா அத்வானி இடம்பெறவில்லை.அப்போது விழாவை தொகுத்து வழங்கி கொண்டிருந்த தொகுப்பாளர் கியாரா அத்வானிக்கு உடல்நிலை சரியில்லை,அதனால் அவர் மருத்துவமணையில் உள்ளார் என்ற தகவலை கூறியவுடன் அங்கே இருந்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆகினார்கள்.
இதையும் படியுங்க: அரசியலில் இறங்கி CM-ஆக ஆசை…விஜய்க்கு ஷாக் கொடுக்கும் திரிஷா…வைரலாகும் வீடியோ..!
இதனால் கியாரா அத்வானிக்கு என்ன பிரச்சனை என்று நெருங்கிய வட்டாரங்கள் விசாரிக்கும் போது,அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.அதாவது அவர் தொடர்ந்து ஓய்வின்றி படங்களில் நடித்து வந்துள்ளதால்,அவர் உடல் நிலை மிகவும் சோர்வாக உள்ளது,மருத்துவர்கள் வீட்டிலே கொஞ்ச நாள் ஓய்வு எடுக்குமாறு கூறியுள்ளனர்.அதனால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை,அவரை நாங்கள் மருத்துவமனையில் எல்லாம்அனுமதிக்க வில்லை என்ற தகவலை கூறியுள்ளனர்.