“கேம் சேஞ்சர்”பட பாடலுக்கு இத்தனை செலவா…கோடிகளை மட்டுமே குறிவைக்கும் சங்கர்..!
Author: Selvan26 December 2024, 6:09 pm
பிரம்மாண்ட பொருட்செலவில் கேம் சேஞ்சர் பாடல்கள்
பிரம்மாண்டத்திற்ற்கு பெயர் போன ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர்.
இப்படைந்தை பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்துள்ளார்,வரும் பொங்கல் அன்று பான் இந்திய படமாக வெளியாக இருக்கும் இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் பல நாட்களாக எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பட வேலைகள் எல்லாம் முடிந்து,படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக இறங்கியுள்ளது.சமீபத்தில் அமெரிக்காவில் இப்படத்தின் ப்ரோமஷன் விழாவை பிரம்மாண்டமாக நடத்தியது படக்குழு,இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்க: நடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
இப்படத்தின் பாடல்களுக்கு வழக்கம் போல் ஷங்கர் கோடிகளை கொட்டியுள்ளார்.அதாவது இப்படத்தில் வரும் 5 பாடல்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட 96 கோடி செலவளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.