ராம் சரண் இத்தன கெட்டப்பா…பிரம்மாண்டமாக வெளிவந்த கேம் சேஞ்சர் ட்ரைலர்..!

Author: Selvan
2 January 2025, 8:58 pm

ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகியிருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி பான் இந்திய படமாக திரைக்கு வர உள்ளது.

இப்படத்தில் ராம் சரண் இரண்டு வேடத்தில் நடித்துள்ளார்.ஷங்கரின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இந்தியன்2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளதால்,இப்படம் ஷங்கருக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறத்து.

Shankar’s Game Changer January 10

ஷங்கர் படம் என்றாலே பட்ஜெட் பல கோடிகளில் இருக்கும்,அதுபோல இப்படத்தின் பாடலுக்கு கிட்டத்தட்ட 75 கோடி செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில்,இன்று படத்தின் ட்ரைலர் மிரட்டலாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.படத்தின் ட்ரைலரில் ராம் சரண் நிறைய கெட்டப்பில் கலக்கி இருக்கிறார்.இப்படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்க: நல்ல சான்ஸ்-ஆ மிஸ் பண்ணிட்டேன்…கரகாட்டக்காரன் படத்தில் நடிக்க இருந்த பிரபல மலையாள நடிகை புலம்பல்..!

மேலும் அஞ்சலி,கியாரா அத்வானி,சுனில்,ஸ்ரீகாந்த் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.ராம் சரண் கரியரில் கேம் சேஞ்சர் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 67

    0

    0

    Leave a Reply