பிக்பாஸ் 7 – ல் 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டில் நுழைந்த விஜே அர்ச்சனா டைட்டில் வென்றுள்ளார். இவருக்கு, ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நாள் ஒன்றிற்கு ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கிய அர்ச்சனா 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ள அர்ச்சனாவிற்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.
இந்நிலையில், அர்ச்சனா டைட்டில் வென்றதை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ஆட்டம், பாட்டாம், சர்ப்ரைஸ் என உற்சாகத்துடன் கொண்டாடியிருக்கிறார். தனது நண்பர்கள், மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோக்களுக்கும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அர்ச்சனா பணம் கொடுத்து டைட்டில் வாங்கியதாக பலர் விமர்சித்து வந்த நிலையில் “எவன் என்ன சொன்னால் எனக்கென்ன” என்றவாறு குதூகலத்துடன் கொண்டாடி வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், அர்ச்சனாவின் வெற்றி குறித்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலோ சிலர் தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அந்த வகையில், பிக் பாஸ் 7 னில் 23 போட்டியாளர்களில் ஒருவராக களம் இறங்கிய கானா பாலா அர்ச்சனா குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அதில், பிக் பாஸ் வீட்டின் உள்ளே அர்ச்சனா என்ன செய்தார் என்ன எஃபெக்ட் கொடுத்தார். ஒரு சின்ன பிரச்சனை அதை சண்டை போட்டுவிட்டு நாலு வாரம் அதை வைத்து அழுது கொண்டே இருந்தார். அர்ச்சனா ஜெயித்ததை ஏத்துக்கவே முடியல, இதற்குப் பெயர் Effort-ஆ.. முதல் நாளிலிருந்து அழுது துவங்கி விட்டார். உனக்கு ஆட பட பேச எல்லாம் தெரியும். வேலையும் செய்யவும் தெரியும். நான் என்ன வேலை செய்யவா அவங்கே சென்றேன் என அர்ச்சனாவை விமர்சித்து பேசியுள்ளார்.
அர்ச்சனா குறித்து கானா பாலா பேசியுள்ள இந்த விஷயம் அர்ச்சனாவின் ரசிகர்களுக்கு கோபத்தை கொடுத்துள்ள நிலையில், அவர்கள் தங்களுடைய பதில்களை சமூக வலைதளங்களின் மூலம் கானா பாலாவை தாக்கி தெரிவித்து வருகிறார்கள். வீட்டிற்குள் இருந்தபோதுதான் சண்டை போட்டுட்டு இருந்தீங்க நிகழ்ச்சி முடிஞ்சு வெளியில் வந்தாச்சு இன்னுமாடா சண்டை போடுறீங்க என்று சிலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
This website uses cookies.