மங்காத்தா மாறி ஒரு சம்பவம் பண்ணிவுடுயா… அப்போவே கேட்ட விஜய் – உளறிய கங்கை அமரன்!

Author: Shree
6 June 2023, 1:36 pm

தமிழ் சினிமாவால் பிரபல இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் மகன். இவர் சினிமா பின்புலம் கொண்ட வாரிசு குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார். இவர் கடந்த 2007ம் ஆண்டு சென்னை 600028 படத்தை இயக்கி மாபெரும் வெற்றி இயக்குனராக அறிமுகம் ஆனார்.

முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின்னர் சரோஜா, கோவா, மங்காத்தா, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 600028 II, மாநாடு, மன்மத லீலை, கஸ்டடி உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். இருந்தாலும் இன்று வரை மங்காத்தா திரைப்படம் தான் அவரின் பெரிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.

இந்த படம் வெளியான போது நடிகர் விஜய் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து வெகுவாக பாராட்டியதோடு, முன்னாடியே இது தான் கேரக்டர் என்று சொல்லி இருந்தால் நானே நடித்திருப்பேன் என கூறினாராம். சரி அது போகட்டும் விடு…. இந்த மாதிரி எனக்கும் ஒரு படம் பண்ணுயா என கேட்டுக்கொண்டாராம். ஆனால், அவருக்கான சரியான கதை அமைய இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. மங்காத்தா வெளியான போது அவர்கள் பேசிக்கொண்டது தான் இப்போது உருவாகப்போகும் தளபதி 68 என வெங்கட் பிரபுவின் அப்பா கங்கை அமரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 492

    0

    0