ஸ்டுடியோக்குள்ளயே கமலை நாங்க விட மாட்டோம்.. – கடுப்பான பிரபலம்.. இப்படிலாமா பண்ணுவாங்க..!

Author: Vignesh
14 March 2023, 10:35 am

தமிழ் சினிமாவில் கங்கை அமரன் இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத் திறன்களை கொண்டவர். கங்கை அமரன் ஆரம்பக்காலங்களில் பாடலாசிரியர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு, இதற்காக தொடர்ந்து கண்ணதாசனிடம் வாய்ப்பு கேட்டு வந்தார்.

Gangai Amaran - updatenews360

இதனிடையே, அவரது அண்ணன் இளையராஜா மூலமாக வந்த கங்கை அமரன் துவக்கத்தில் பாடல் வரிகள்தான் எழுதி கொண்டு இருந்தார். இவர் எழுதிய பல பாடல்கள் ஹிட் அடித்தன. அதிலும் குறிப்பாக, உன் பார்வையில் ஒராயிரம், மண்ணில் இந்த காதல் அன்றி போன்ற பாடல்கள் இன்றுவரை மிகவும் பிரபலமானவை என்று சொல்லலாம்.

இதனையடுத்து, 1982 ஆம் ஆண்டு கங்கை அமரன் இசையமைப்பாளரான பிறகு வாழ்வே மாயம் திரைப்படத்திற்கு இசையமைத்தார். கங்கை அமரனை போலவே கமலும் சினிமாவில் அனைத்து துறைகள் குறித்தும் கலை ஞானம் உள்ளவர்.

Kamal Kiss- Updatenews360

எனவே, கமல்ஹாசனை வைத்து அந்த காலக்கட்டத்தில் படம் எடுக்கும்போது இயக்கம், இசை அனைத்திலும் அவரது பங்கும் இருக்கும் என்று சொல்லலாம். அதனிடையே, வாழ்வே மாயம் படத்தின் அனுபவம் குறித்து கங்கை அமரன் ஒரு பேட்டியில் பகிர்ந்து உள்ளார். அதில் வாழ்வே மாயம் படத்தின் பாடல்களை கமலுக்காக மாற்றி உள்ளீர்களா?” என கேள்வி கேட்டார்கள்.

vazhve mayam-updatenews360

அதற்கு உடனே கங்கை அமரன் நாங்கள் கமலை இசையமைக்கிற இடத்துக்குள்ளேயே விட மாட்டோம் என்றும், அவருக்கு அங்கு அனுமதி கிடையாது எனவும், வாழ்வே மாயம் படத்தின் பாடல்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தான் போட்டது என்றும், அது மட்டுமின்றி வாழ்வே மாயம் படம் இறுதி வரை கமல்ஹாசனும் இசையமைக்கும் பகுதிக்கே வரவில்லை என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

Kamal - Updatenews360
  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 599

    0

    0