குட் பேட் அக்லிக்கு மூடு விழா நடத்திய கேங்கர்ஸ்? கடைசில இப்படி ஆகிடுச்சே!

Author: Prasad
25 April 2025, 3:22 pm

களைகட்டும் கேங்கர்ஸ்

சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து சுந்தர் சி-வடிவேலு காம்போ  இணைந்துள்ளதால் இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இத்திரைப்படம் பூர்த்தி செய்துள்ளது என்றுதான் கூற வேண்டும். 

gangers movie beat good bad ugly single day collection

வடிவேலுவின் காமெடி காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பதாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்திரைப்படம் நிச்சயம் வடிவேலுவுக்கு கம்பேக் தான் என விமர்சகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 

குட் பேட் அக்லி டோட்டல் குளோஸ்!

இந்த நிலையில் அஜித் திரைப்படமான “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் வசூலை கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டி வருகிறது “கேங்கர்ஸ்”. “குட் பேட் அக்லி” திரைப்படம் இப்போது வரை உலகமெங்கும் ரூ.220 கோடிகள் வசூல் ஆகியுள்ளது. 

gangers movie beat good bad ugly single day collection

இந்த நிலையில் சுந்தர் சியின் “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1 கோடியே 16 லட்சம் வசூல் ஆகியுள்ளதாம். ஆனால் நேற்று தமிழ்நாட்டில் “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் வசூல் ஒரு கோடிதான் என ஒரு தகவல் வெளிவருகிறது. இதனை வைத்து பார்க்கும்போது “குட் பேட் அக்லி” திரைப்படத்தை “கேங்கர்ஸ்” திரைப்படம் ஓரங்கட்டியுள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • ajith kumar next movie directed by sukumar அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?
  • Leave a Reply