இரவில் மட்டுமே ஷூட்டிங்…கொரோனா காலத்திலும் 200 கோடி வேட்டையாடி சாதனை படைத்த படம்.!
Author: Selvan28 February 2025, 2:09 pm
கோடிகளை அள்ளிய பாலிவுட் படம்
ஒட்டுமொத்த உலகத்தையே அதிரவைத்த கொரோனா பாதிப்பால் பலரும் சிரமப்பட்டனர்.எத்தனை காலங்கள் கடந்தாலும் இந்த வைரஸ் பாதிப்பை எவராலும் எளிதில் மறந்து விட முடியாது,அந்த மாதிரி ஒரு பேரிடராக அமைந்தது.
அந்த காலகட்டத்திலும் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி 200 கோடி வசூல் அள்ளி இருப்பது சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இதையும் படியுங்க: 100 கோடியை நெருங்கும் ‘டிராகன்’…புகழின் உச்சியில் பிரதீப் ரங்கநாதன்.!
கொரோனா காலகட்டத்தில் பல திரையரங்குகள் மூடப்பட்டன,பல படங்கள் தங்களுடைய படப்பிடிப்பை தொடர முடியாமல் பாதியிலே கைவிட்டது,ஷூட்டிங் முடிந்த படங்கள் OTT-யில் மட்டுமே வெளியாகின.
அந்த வகையில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய “கங்குபாய் கத்யாவதி” திரைப்படம் ஹிந்தியில் வெளியாகி சினிமா வட்டாரத்தை திணறடித்து.பல கட்டுப்பாடுகளையும் தாண்டி இப்படம் வசூலை குவித்தது.
ஒரு உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம்,கத்தியவதி என்ற பகுதியிலிருந்து மும்பைக்கு ஒரு சாதாரண பெண் கங்குபாய் வருகிறார்,அப்போது அந்த சூழல் அவரை பாலியல் தொழிலுக்கு தள்ளுகிறது,அவர் தைரியமாக தனக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களை தட்டி கேட்டு சக்திவாய்ந்த பெண்ணாக எப்படி மாறுகிறார் என்பதே படத்தின் கதை.
அலியா பட் இப்படத்தில் கச்சிதமாக நடித்து அசத்தியிருப்பார்,இப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது,இன்றைக்கும் இத்திரைபபடம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.உலகளவில் கிட்டத்தட்ட 210 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்து சாதனை புரிந்தது.