‘அவர் தான் ஜெயிக்கணும்’.. சமயபுரம் கோயிலில் குடும்பத்துடன் அக்னிசட்டி எடுத்த கஞ்சா கருப்பு..!
Author: Vignesh9 April 2024, 6:29 pm
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிதாமகன் படத்தில் நடிகர் கஞ்சா கருப்பு அறிமுகமானார். அதன் பின்னர், பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார்.
2014இல் வேல்முருகன் போர்வெல் சென்ற பெயரில் ஒரு படத்தை சொந்தமாக தயாரித்தார். அந்த படம் சரியாக போகாத காரணத்தால், கஞ்சா கருப்பு தான் சேர்த்து வைத்திருந்த மொத்த சொத்தையும் இழந்துவிட்டார். சொந்த வீட்டை விட்டு தற்போது வாடகை வீட்டில் பிழைக்க வழியில்லாமல் வறுமையில் வாடி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் அடுத்த ஜென்மத்தில் பாம்பாக பிறந்தால் கூட படம் எடுப்பேன் என்று கஞ்சா கருப்பு விரக்தியில் கூறி வருகிறார்.
மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!
இந்நிலையில், இன்று கஞ்சா கருப்பு சமயபுரம் மாரியம்மன் கோவில் அக்னிசட்டி உடன் வந்து வழிபாடு நடத்தியுள்ளார். மேலும், தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி வெற்றி பெற வேண்டும் என சொல்லி வேண்டுதலுடன் அக்னிசட்டியை குடும்பத்துடன் எடுத்து வந்துள்ளார்.