5 உசுரு என்னால போயிடுச்சு.. கஞ்சா கருப்பு வாழ்வில் நடந்த சோகமான நிகழ்வு..!

Author: Vignesh
15 December 2023, 5:30 pm

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிதாமகன் படத்தில் நடிகர் கஞ்சா கருப்பு அறிமுகமானார். அதன் பின்னர், பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார்.

2014இல் வேல்முருகன் போர்வெல் சென்ற பெயரில் ஒரு படத்தை சொந்தமாக தயாரித்தார். அந்த படம் சரியாக போகாத காரணத்தால், கஞ்சா கருப்பு தான் சேர்த்து வைத்திருந்த மொத்த சொத்தையும் இழந்துவிட்டார். சொந்த வீட்டை விட்டு தற்போது வாடகை வீட்டில் பிழைக்க வழியில்லாமல் வறுமையில் வாடி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் அடுத்த ஜென்மத்தில் பாம்பாக பிறந்தால் கூட படம் எடுப்பேன் என்று கஞ்சா கருப்பு விரக்தியில் கூறி வருகிறார்.

ganja karuppu-updatenews360

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கஞ்சா கருப்பு தனது பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்டாததால் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க, அதை பார்த்து எனக்கு கண்களில் கண்ணீர் வருகிறது என்று எமோஷனலாக தெரிவித்து இருந்தார். மேலும், தான் படம் தயாரித்ததால் குடும்பத்தில் ஐந்து உயிர்கள் போய்விட்டது என்றும், அவர் கூறியிருக்கிறார். அதாவது, அவரின் அக்கா மகன் தன்னுடைய ஐயா, பாட்டி மற்றும் மாமா ஆகியோரை இழந்துவிட்டேன் என கஞ்சா கருப்பு வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…