கௌதமிக்கு மட்டும் தான் தெரியும்….அறைக்குள் சென்றால் என்ன செய்வேன்?ரகசியத்தை உளறி கமல்!

Author: Shree
24 July 2023, 8:53 pm

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகரான கமல் ஹாசன் 1978ம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் வாணி உடனான திருமண உறவை பத்து ஆண்டுக்கு பின் விவாகரத்து செய்து முறித்துக்கொண்டார். அதன் பிறகு 1988ம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். அதன் பின்னர் 2004ம் ஆண்டு கமல் சரிகாவையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

இதையடுத்து தான் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமலே லிவிங் முறையில் வாழ்ந்து அவரையும் பிரிந்தார். தெரிந்தே இத்தனை நடிகைகளுடன் பழகி பிரிந்துவிட்ட கமல் ரகசியமாக பல நடிகைகளுடன் உறவு வைத்திருந்ததாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் சிம்ரன், நடிகை பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டார்கள். இதில் கௌதமி தான் அதிக நாட்கள் கமலுடன் நெருங்கிய உறவில் இருந்தார். இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தார்கள்.

பாபநாசம் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தனர். இந்நிலையில் கமல் தான் கோபமாக இருக்கும்போதெல்லாம் அறைக்கு சென்று தூங்கிவிடுவேன் என கௌதமியுடன் பங்கேற்ற பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அப்படித்தான் ஒருமுறை விஸ்வரூபம் படத்தில் நடித்தபோது அப்படத்தின் பிரச்சனையால் நான் மிகவும் கோபப்பட்டு என்னுடைய அறைக்குள் சென்று தூங்கிவிட்டேன். இந்த விஷயம் கௌதமிக்கு நன்றாக தெரியும் என கூறியுள்ள பழைய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கமல்ஹாசனின் ரகசிய விஷயங்கள் கூட கௌதமிக்கு தெரிந்திருப்பதை பார்த்து நெட்டிசன்ஸ் விமர்சித்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ