என் மனைவி குண்டா இருந்தா உங்களுக்கு ஏன் குத்துது? ஆங்கர் கேள்வியால் கடுப்பான கெளதம் கார்த்திக்!

Author: Shree
29 March 2023, 10:14 am

வாரிசு நடிகரான கௌதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாக அப்படத்தில் நடித்த கெளதம் கார்த்திக் முதல் படத்திலே மக்கள் அனைவ்ருக்கும் பரீட்சியமான முகமாக பார்க்கப்பட்டார்.

அதன் பிறகு சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, தேவராட்டம், இந்திரஜித் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்த படங்கள் பெரிதாக வரவேற்பு இல்லாததால் மார்க்கெட் இழந்தார். தேவராட்டம் படத்தில் நடித்தபோது அப்படத்தின் கதாநாயகி மஞ்சிமா மோகனுடன் ஏற்பட்ட நெருக்கம் பின்னாளில் காதலாக மாறியது.

தொடர் பிளாப் படங்களை கொடுத்து தோல்வியடைந்த நேரத்தில் மஞ்சிமா மட்டும் தான் என்னுடன் இருந்தார். அது தான் எங்கள் காதல் வலுவடைய காரணமாக இருந்தது என பேட்டியில் கூறியிருந்தார் .இந்நிலையில் இவர் தற்போது சிம்புவின் பத்து தல படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இருவரும் பிரபல யூடியூப் சேனல் நேர்காணலில் படம் குறித்து அனுபவங்களை கூறியனார்கள். அப்போது ஆங்கர் விஜே பார்வதி, உங்கள் மனைவிக்கு வரும் body shaming கிண்டல் கேலி குறித்து ஒரு கணவராக நீங்கள் அவருக்கு என்ன சொல்வீர்கள் என கேட்டதற்கு பதில் கூறிய கெளதம் கார்த்திக், ‘

அடுத்தவங்க என் இப்படி யோசிக்குகாரங்கனே தெரியல…. நான் இதை பற்றி எதுவும் நான் மஞ்சிமாவுக்கு சொல்லத்தேவையே இல்லை. ஏனென்றால் மஞ்சிமா மிகவும் தைரியசாலி, உடல் பருமன் குறித்த கேலி, கிண்டல்களை அவர் எப்பவோ எதிர்கொண்டுவிட்டார். அப்படி யாரேனும் சொன்னால், பாவம் அவங்களுக்கு கண்ணு தவிரவேற எதுவுமே தெரியல என கூறுவார். ஒரு கட்டத்தில் அதையெல்லாம் தாண்டி அவருக்கு மகிழ்ச்சியான விஷயம் எதுவோ அதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். நானும் மஞ்சிமா ஆசைப்படும் எதுவாக இருந்தாலும் அவருக்கு செய்துவிடவேண்டும் என நினைப்பேன் அதுவே அவங்களுக்கு ஹேப்பி தான் என்றார்.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 2498

    25

    6