அந்த ஆசைக்காக அனாதையாக்கிட்டார்… மனைவியின் தங்கையுடன் இரண்டாம் திருமணம் – உண்மை கூறி அதிர வைத்த கெளதம் கார்த்திக்!

Author: Shree
22 August 2023, 4:52 pm

தமிழ் சினிமாவின் நவரச நாயகன் ஆண்களே காதல் கொள்ளும் ஆணழகன் என்றெல்லாம் புகழப்பட்டவர் தான் நடிகர் கார்த்திக். இவர் 1988ம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் தான் கெளதம் கார்த்திக், கைன் கார்த்திக். அழகாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையை சிதைத்துக்கொண்டார் கார்த்திக்.

ஆம், மனைவி ராகினி உடனான வாழ்க்கையை 4 வருடத்தில் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார். அதன் பின்னர் ரதி என்பவரை 1992ம் ஆண்டு மறுமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு திரன் என்ற ஒரு மகன் பிறந்தான். இந்நிலையில் கெளதம் கார்த்திக் தன்னுடைய அப்பாவால் சிறுவயதில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதாவது என்னுடைய அப்பா திடீரென என் அம்மாவை விட்டெறிந்து வேறொருவரை திருமணம் செய்துக்கொண்டார். அந்த வலியை என் அம்மாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அதனால் என் அப்பாவை விட்டு பிரிந்து என்னையும் என் தம்பியையும் அழைத்துக்கொண்டு மும்பையில் வைத்து வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கினார்.

சிங்கிள் மதராக அம்மா எங்களை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டார். பல பிரச்சனைகள் வந்தாலும் அதையும் மீறி தைரியமாக எல்லாத்தையும் எதிர்கொண்டார். இத்தனை வருஷத்தில் என் அப்பாவிடம் இருந்து ஒரு சில முறை தான் போன் வந்திருக்கும். எப்போவாச்சும் தான் எங்களை பார்க்க வருவார். அப்போதெல்லாம் நான் மிகவும் தனிமையில் வாடினேன் என மிகவும் வருத்தமாக பேசியுள்ளார். கெளதம் கார்த்தியின் இந்த பேட்டி அதிர்ச்சி கொடுத்ததோடு மிகவும் வருத்தமடைய செய்துள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்