தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?
Author: Prasad9 April 2025, 6:03 pm
திருப்புமுனை அமையாத நடிகர்
மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து வேறு எந்த திரைப்படமும் இவரது கெரியருக்கு திருப்புமுனையாக அமையவில்லை.

எனினும் இவர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “ஆகஸ்து 16 1947” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் “கிரிமினல்”, “மிஸ்டர் எக்ஸ்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கௌதம் கார்த்திக் தனது பெயரை மூன்று எழுத்தாக சுருக்கிக்கொண்டதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
மூன்றெழுத்து பெயர்

கௌதம் கார்த்திக்கின் உண்மையான பெயர் கௌதம் ராம். அவரது தந்தையின் பெயரை பின்னால் இணைத்து ராமை நீக்கிவிட்டு கௌதம் கார்த்திக் என்ற பெயரை சினிமாவிற்காக வைத்துக்கொண்டார். இந்த நிலையில் கௌதம் ராம் கார்த்திக் என்ற பெயரை GRK என்று தற்போது சுருக்கி மாற்றிக்கொண்டுள்ளாராம். அவரது நண்பர்கள் அனைவரும் இப்போதெல்லாம் அவரை GRK என்றுதான் அழைக்கிறார்களாம். இவ்வாறு ஒரு தகவல் வெளிவந்துள்ளது.