கயிற்றால் கட்டப்பட்ட கை.. நீச்சல் குளத்தில் கடல் பட நாயகன்.. ஒருவேல அப்படி இருக்குமோ..!

Author: Vignesh
23 February 2024, 8:51 am

வாரிசு நடிகரான கௌதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாக அப்படத்தில் நடித்த கெளதம் கார்த்திக் முதல் படத்திலே மக்கள் அனைவ்ருக்கும் பரீட்சியமான முகமாக பார்க்கப்பட்டார்.

அதன் பிறகு சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, தேவராட்டம், இந்திரஜித் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்த படங்கள் பெரிதாக வரவேற்பு இல்லாததால் மார்க்கெட் இழந்தார். தேவராட்டம் படத்தில் நடித்தபோது அப்படத்தின் கதாநாயகி மஞ்சிமா மோகனுடன் ஏற்பட்ட நெருக்கம் பின்னாளில் காதலாக மாறியது.

gautham karthik-updatenews360

தொடர் பிளாப் படங்களை கொடுத்து தோல்வியடைந்த நேரத்தில் மஞ்சிமா மட்டும் தான் என்னுடன் இருந்தார். அது தான் எங்கள் காதல் வலுவடைய காரணமாக இருந்தது என பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில், கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வரும் கௌதம் கார்த்திக் அடுத்தது Mr X என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கௌதம் கார்த்திக் நீச்சல் குளத்தில் தண்ணீருக்குள் கை கட்டப்பட்ட நிலையில் இருப்பது போல போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். கை கட்டப்பட்ட நிலையில் அதிலிருந்து வெளியில் வருவது போல போட்டோ ஷூட் எடுத்து Break free from your own limitations என குறிப்பிட்டு அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 235

    1

    0