தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தளபதி விஜய் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த திரைப்படமே விஜய்யின் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறுகிறார்கள்.
இந்த படத்தில் நடித்து முடித்து அடுத்ததாக விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார். அதன் பிறகு சினிமாவுக்கு டாட்டா காட்டி விடுவார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் நோக்கி உருவாகி வரும் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே வி என் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது .
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகரான பாபி தியோல் கமிட் ஆகி இருப்பதாக பட குழு அதிகாரப்பூர்வமாக நேற்று புதிய போஸ்டருடன் அறிவித்திருந்தார்கள். அதையடுத்து இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என புதிய போஸ்டருடன் படக்குழு அறிவித்தது.
இதையும் படியுங்கள்:அமைதியா படுடா…. மகனை மடியில் சாய்த்து கவலை மறந்து தூங்கும் நயன்தாரா – வீடியோ!
முன்னதாக நடிகை பூஜா ஹெக்டே விஜய்யுடன் சேர்ந்து பீஸ்ட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான கெளதம் வாசுதேவ் மேனன் தளபதி 69 படத்தில் இணைந்துள்ளார்.
அதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளது. கெளதம் மேனன் லியோ படத்தை தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.