கெளதம் மேனனின் முதல் காதல்…அப்போ அந்த படம் இவரோட நிஜ ஸ்டோரியா…ரசிகர்கள் ஷாக்..!
Author: Selvan28 January 2025, 12:52 pm
தமிழ் சினிமாவில் இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி,தற்போது பல படங்களில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் இயக்குனர் கெளதம் மேனன்.
இதையும் படியுங்க: பணம், புகழால் கவர்ச்சிக்குள் குதித்த பிக் பாஸ் பிரபலங்கள்… காலக் கொடுமை..!!
இவர் கமல்,அஜித்,சூர்யாவை வைத்து பல ஆக்ஷன் படங்களை இயக்கி வெற்றி கண்டார்,மறுபுறம் வாரணம் ஆயிரம்,விண்ணைத்தாண்டி வருவாயா என மனதை வருடும் காதல் படங்களை கொடுப்பதிலும் இவர் கில்லாடி,இப்படி இயக்குனராக ஜொலித்த இவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய முதல் காதல் கதையை பகிர்ந்துள்ளார்.இவர் தன்னுடைய நீண்ட நாள் தோழியை தான் காதலித்து திருமணம் செய்துள்ளார்.வாரணம் ஆயிரம் படத்தில் முதல் காதலி இறந்தவுடன் சூர்யா தன்னுடைய தோழியை காதலித்து திருமணம் செய்வது போல் காட்டப்பட்டிருக்கும்,அதே போல கெளதம் மேனனின் முதல் காதல் தோல்வி அடைந்து விரக்தியில் இருந்த போது,அவருக்கு ஆறுதலாக அவருடைய மனைவி இருந்துள்ளார்.
இதனால் இருவரும் காதலித்து பின்பு திருமணம் செய்து கொண்டனர்.அதே போல வாரணம் ஆயிரம் படத்தில் வருவது போல முதலில் காதல் ப்ரோபஸ் செய்ததும் அவருடைய மனைவி தான்,இவருடைய நிஜ வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படத்தை இயக்கி இருப்பதாக அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்..