சூர்யா என்னை ரிஜெக்ட் பண்ணி தப்பு செஞ்சுட்டாரு : கௌதம் மேனன் ஆதங்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2025, 2:29 pm

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை வைத்து முன்னுக்கு வந்தவர் நடிகர் சூர்யா. இவர் நடித்து அண்மையில் வெளியானது கங்குவா படம்.

பெரும் பொருட்செலவில், மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான கங்குவா மோசமான விமர்சனத்தை பெற்று பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் தோல்வியை தழுவியது.

இதையும் படியுங்க: இன்ஸ்டா பிரபலத்திடம் பேரம் பேசிய நயன்தாரா…சர்ச்சையில் சிக்கிய வைரல் வீடியோ..!

அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சூர்யா, ஆரம்பத்தில் காக்க படம்தான் இவருக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. இதனால் கவுதம் மேனனின் ஆஸ்தான நடிகராக உயர்ந்த சூர்யா, கவுதம் மேனன் படத்தில் தொடர்ந்து நடித்தார். ஆனால் அவருடைய படத்தையே ரிஜெக்ட் செய்துள்ளார்.

Gautham Menon Talked Openly About Suriya

இது குறித்து கவுதம் மேனனே கூறியுள்ளார். அதாவது, துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவை தான் நடிக்க கூறினேன். ஆனால் அவர் அதை ரிஜெக்ட் செய்துவிட்டார். ஏன் என்று இன்று வரை எனக்கு புரியவில்லை. அவர் இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

  • Mysskin controversial speech வாய திறந்தால் கெட்ட வார்த்தை…மேடை நாகரீகம் தெரியாதா…மிஷ்கினை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்கள்..!
  • Leave a Reply