படம் ஓடுனாலே பொறாமை படுறாங்க… ஆதங்கத்தை வெளிப்படுத்திய கௌதம் மேனன்…!
Author: Selvan13 January 2025, 1:50 pm
துருவநட்சத்திரம் ரிலீஸ் ஆகாமல் இருக்க இதான் காரணம்
பிரபல இயக்குனரான கெளதம் வாசுதேவ் மேனன் சமீப காலமாக படங்களை இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அதில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் கடந்த வந்த பல விசயங்களை அவர் கூறினார்.அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர்,அவரிடம் இந்த திரைத்துறையில் உங்களுக்கு மறக்க முடியாத உதவி செய்த நபர் யாராவது இருக்காங்களா என்று கேள்வி கேட்க,அதற்கு அவர் அப்படி யாரும் இல்லை என பதிலளித்தார்.
இதையும் படியுங்க: தனுஷ் காட்டில் வெற்றிமழை தான்…அடுத்த பட குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!
மேலும் அவர் தற்போது இருக்கிற காலகட்டத்தில் ஒரு படம் நன்றாக தியேட்டரில் ஓடினால் பொறாமைப்படுபவர்கள் தான் இங்கு அதிகம் உள்ளனர் என கூறியுள்ளார்.என்னுடைய படமான துருவ நட்சத்திரம் திரைப்படம் 2013-ல் தொடங்கினேன்,2017-ஆம் ஆண்டு அப்படத்தை ரிலீஸ் செய்யலாம் என முடிவு பண்ணினேன்,ஆனால் பல வித சூழ்நிலைகளால் இப்போது வரை அப்படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என வேதனையோடு தெரிவித்துள்ளார்.
இவருடைய இயக்கத்தில் கடைசியாக கடந்த வருடம் ஜனவரி மாதம்”ஜோஷ்வா இமை போல் காக்கா”படம் ரிலீஸ் ஆனது.அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.தற்போது விஜயின் தளபதி69 படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.