16 வயதில் அந்த நடிகருடன் நடந்தது.. இப்போ வரைக்கும் திட்டுறாங்க.. புலம்பிய காயத்ரி ரகுராம்..!

Author: Vignesh
10 August 2024, 6:18 pm

தமிழ் சினிமாவில் முக்கிய நடன இயக்குனராகவும் நடிகையாகவும் இருந்தவர் காயத்ரி ரகுராம். அதன் பின்னர் ஆளே அடையாளம் தெரியாமல் இருந்த காயத்ரி வாய்ப்பு இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டேமேஜ் ஆனார்.

அதன்பின், அரசியல் கட்சியில் பணியாற்றி அதிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து இருந்தார். அதில், என் சிறுவயதில் என் அப்பாவிடம் என்னை நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் கேட்டார்கள். ஆனால், நடிப்பதில் பயம் என்பதால் நடிக்க மாட்டேன் என்று கூறியிருப்பேன். அதனால், அஞ்சலி கேளடி கண்மணி படத்தில் நடிக்க கேட்டு நான் மறுத்துவிட்டேன்.

அதன் பின்னர், வாய்ப்புகள் என்னை நோக்கி மீண்டும் வந்தது. மேடை நிகழ்ச்சிகளில் இதற்கிடையில் சூர்யா உள்ளிட்ட கலைஞர்களோடு நான் நடனமாட ஆரம்பித்து பத்தாம் வகுப்பு படிக்கும் போது இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

அப்போது, என்னால் அதில் நடிக்க முடியவில்லை. பின்னர் நடிக்கலாம் என்று முடிவெடுத்தேன். அப்போது, சார்லி சாப்ளின் பட வாய்ப்பு வந்தது. காமெடி படங்கள் பிடிக்கும் என்பதால் யார் நடிக்கிறார் என்று கூட பார்க்காமல் ஓகே சொல்லிவிட்டேன். பிரபுதேவா உடன் நான் நடிக்கும்போது, எனக்கு எதுவுமே தோன்றவில்லை. காரணம் என்னவென்றால், அதில் நடித்த எல்லோரும் எனக்கு சிறுவயதில் இருந்து நல்ல பழக்கம்.

அதனால், கொஞ்சம் ஆண்மகன் போலவே நடந்து கொள்வேன். பிரவு சார் தான் ஒரு பெண் போல் எப்படி நடிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தார். பிரபுசாரை பொறுத்தவரை நடிகைகளுக்கு அதிக ஸ்பேஸ் கொடுத்து அவர்கள் நன்றாக தெரியும் படி நடனத்தை வடிவமைப்பார். அப்படித்தான் அந்த பாடலில் பிரபுதேவாவின் தோள்மேல் காலை போட்டு நடனமாடி இருப்பேன்.

அது பேசு பொருளானது. ஆனால், அப்போது நான் மிகவும் சிறுவயது பெண்ணாக இருந்தேன். யார் என்ன சொன்னாலும், பெரிதாக கண்டுகொள்ள மாட்டேன். அப்படத்தின் மூலம் எனக்கு நிறைய ரசிகர்களாக மாறினார்கள். சிலர் என்னை கடுமையாகவும் திட்டவும் செய்தார்கள். ஆனால், எனக்கு அப்போது 16 வயது என்பதால் எதுவும் என் காதில் விழவில்லை என்று வெளிப்படையாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu