விஜய் கூட பிகினில.. வேற மாதிரி பேசிய வசீகரா பட நடிகையின் ஓபன் ஸ்டேட்மெண்ட்..!

Author: Vignesh
25 September 2023, 6:30 pm

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. எனவே படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, நடிகர் பிரபுதேவா நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை காயத்ரி ஜெயராமன் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், விஜய்யின் வசீகரா போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

அதன் பின்னர், மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களில் நடித்த காயத்ரி ஜெயராமனுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது காயத்ரி ஜெயராமன் சீரியலில் நடித்து வருகிறார்.

vaseegara- updatenews360 g

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காயத்ரி ஜெயராமன் விஜய் பற்றி பேசுகையில், சினிமாவில் நிறைய நடிகர்கள், நடிகைகளை சொந்தரவு செய்து வருகிறார்கள். ஆனால், விஜய் உடன் நடிக்கும் போது நமக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும்,
விஜய் உடைய பார்வை எப்போதும் தவறாக இருக்காது எனவும், விஜய்யின் முன்னால் பிகினி உடையில் தான் நடித்தால் கூட அங்கே தனக்கு பாதுகாப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 429

    0

    0