GBU படத்தால தூங்க கூட முடியல- பேட்டியில் வெளிப்படையாக புலம்பிய Darkkey
Author: Prasad10 April 2025, 11:56 am
மாஸ் ஓப்பனிங் மாமே
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் மளமளவென விற்று தீர்ந்தது. இது வரை வெளிவந்த அஜித் திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் உள்ள திரைப்படமாக “குட் பேட் அக்லி” திகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் காலை 9 மணி காட்சியே FDFS காட்சியாக திரையிடப்பட்டது. இத்திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில் இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இந்த படத்தால் தூக்கம் போச்சு…
“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பிரபல மலேசியா பாடகரான Darkkey-ன் “புலி புலி” பாடல் இடம்பெற்றிருந்தது. இப்பாடல் சிங்கிள் பாடலாக வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பாடகர் Darkkey சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “என்னால் தூங்க முடியவில்லை. போனுக்கு மேல் போன் வந்துகொண்டே இருக்கிறது. நேற்று கூட காலை 4 மணிக்கு Call செய்தார்கள். ஏனென்றால் மலேசிய நேரம் அவர்களுக்கு தெரியமாட்டிகிறது. ஆதலால் நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது போன் வரும். தூங்கமுடியாத அளவுக்கு போய்விட்டது.போன் செய்து ரொம்ப நல்லா இருக்கு பாடல் என்று பாராட்டுகிறார்கள்” என்று அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார் Darkkey.
மலேசிய தமிழ் பாடகர் Darkkey ஒரு ராக் பாடகராவார். இவர் பாடல்களை இவரே எழுதி பாடி வருகிறார். இவரது பாடல்கள் மலேசிய தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற பாடல்களாகும் ஆகும்.