சிக்கலான நவீன உறவுகளை சொல்லும் தீபிகா படுகோனே-யின் ‘கெஹ்ரையன்’ டிரைலர் வெளியீடு..!
Author: Rajesh21 January 2022, 4:32 pm
நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள ‘கெஹ்ரையன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
இதில் சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே ஆகியோர் நடித்துள்ள, இந்தப் படத்தை ஷகுன் பத்ரா இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்;டுள்ளது.
இந்த டிரெய்லரில் பல முத்தக்காட்சிகளும், குளியலறை, படுக்கைகாட்சிகளும் இடம் பெற்றிருப்பது ரசிகர்களை சூடேற்றியுள்ளது.
இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் டிரெய்லரில் நவீன உறவுச்சிக்கலை படம் பேச உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.