அந்த விஷயத்துக்காக வாய்ப்பு கொடுக்கல துரத்தி விட்டுட்டாங்க.. பல ஆண்டு உண்மையை வெளியிட்ட ஜெனிலியா..!
Author: Vignesh21 July 2023, 4:23 pm
ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார்.

அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சமூக வலைதளங்களில் சில க்யூட் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், சமீப காலமாக, உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்வதில் அதீத ஆர்வம் செலுத்தி வரும் இவர், இது போல் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

இந்நிலையில், பல ஆண்டுகள் கழித்து ஜெனிலியா முக்கிய ரோலில் நடித்த Trial Period ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் உள்ளது. அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். தான் தெனிந்திய சினிமாவில் நடித்த போது தன்னை பாலிவுட் சினிமா கைவிட்டுவிட்டது என்றும், அங்கேயே செல் என்று கூறினார்கள் எனவும், ஆனால் தனக்கு நடிப்பின் மீது காதல் வர காரணம் தென்னிந்திய சினிமா தான் என்றும், தனக்கு தென்னிந்திய சினிமாவை மிகவும் பிடிக்கும் என ஜெனிலியா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 13 வருடத்திற்கு முன் வேலாயுதம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.