லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளனர். விஜயின் திரைப்பயணத்தில் மிகவும் வெற்றிப்படமாக அமைந்த படமாக கில்லியை சொல்லலாம். தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திர பட்டாளங்களுடன் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் Okkadu என்ற தெலுங்கு படத்தை தழுவி எடுக்கப்பட்டது. அப்படம் அப்போதே 50 கோடி வரை வசூலித்துள்ளது.
மேலும் படிக்க: இரவு பார்ட்டியில் PlayBoy நடிகருடன் ஐஸ்வர்யா ராஜேஷ்.. யாருன்னு தெரிஞ்சா அல்லு வுட்ரும்..!
படத்தின் கதையை தாண்டி இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இப்போதும், ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் உள்ளது என்றே கூறலாம். அந்த வகையில், கில்லி படத்தில் விஜயின் தங்கையாக நடித்து ஜெனிபர் பிரபலமானவர். இவர் புவனா என்ற கதாபாத்திரத்தில் குழந்தைத்தனமான இயல்பான நடிப்பை ஜெனிபர் வெளிப்படுத்தி இருந்தாலர்.
பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். 33 வயதாகும் ஜெனிபர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தொழிலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். இவர் நேச்சர் ஜாய் என்ற பெயரில் ரசாயனம் கலக்காத பொருட்களை தயாரித்து தற்போது விற்பனை செய்து வருகிறார்.
மேலும் படிக்க: ஜாதி பார்த்து ஒதுக்கி வைக்கப்பட்ட தனுஷின் பெற்றோர்கள்.. ஐஸ்வர்யா விவாகரத்திற்கு இதுதான் காரணமாம்..!
இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் சில தினங்களுக்கு முன்பு கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மீண்டும் பல கோடி வசூலை அள்ளி வருகிறது. இந்நிலையில், கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக புவனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நான்சி ஜெனிபர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.
தனக்கு தனிப்பட்ட விஷயமாக கில்லி படத்தில் பிடித்தது என்னவென்றால், தனக்கும் விஜய் சாருக்குமான நிஜமான தொடர்புதான் என்றும், தன்னை தங்கையாகவே விஜய் சார் பார்த்தாரு, அந்த இடத்தில் வாடா போடான்னு சொல்ல எனக்கு பயமாக இருந்தது. அதற்கு விஜய் சார் அதெல்லாம் பயப்படக்கூடாது. படத்துல நான் அண்ணன் நீ வாடா போடான்னு தான் கூப்பிடனும் என்று கூறினார். ஏற்கனவே நேருக்கு நேர் படத்தில் என் சித்தப்பாவாக விஜய் நடித்திருந்தார். அப்போது, அவரை அங்கிள் என்று தான் கூப்பிடுவேன். அந்த மரியாதை தான் எனக்கு இருந்தது. கில்லியில் வாடா போடான்னு கூப்பிட கூச்சமாக இருந்தது. என்னை அப்படி நடிக்க வைத்தது அவர்தான் என்று நான்சி ஜெனிபர் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.