ஆசை காட்டி மோசம் செய்த கமல் பட துணை இயக்குனர்.. கர்ப்பமாக்கி ஏமாற்றியதால், பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார்..!

Author: Vignesh
14 February 2023, 11:35 am

தமிழ் சினிமாவின் லோகேஷ் கனகராஜ் டாப் இயக்குனர்கள் வரிசையில் இருப்பவர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ், தற்போது தளபதி விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், லோகேஷ் கனகராஜிடம் துணை இயக்குனராகவும் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கு பாடலாசிரியராகவும் எழுதி வருபவர் விஷ்ணு இடவன்.

logesh -updatenews360

விஷ்ணு இடவன் குறித்து பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் பெருமையாக பேசியிருந்தார். விஷ்ணு இடவன் எழுதிய ‘பொளக்கட்டும் பற பற’ மற்றும் ‘போர் கண்ட சிங்கம்’ போன்ற பாடல்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது.

logesh -updatenews360

இந்நிலையில், விஷ்ணு இடவன் மீது பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், விஷ்ணு இடவன் காதலித்து வந்த பெண்ணை கர்ப்பமாகிவிட்டு அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசில் புகார் அளித்து தற்போது இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?
  • Close menu